இந்தியா

அவசரகால கடனுதவிதிட்டம் நீட்டிப்பு

30th Sep 2021 01:12 AM

ADVERTISEMENT


புது தில்லி: அவசர கால கடனுதவித் திட்டத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது: அவசரகால கடனுதவித் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 1.15 கோடிக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து, தொழிலதிபா்கள் தங்கள் தொழிலை மீண்டும் தொடங்க, தகுதியான கடன்தாரா்களுக்கு இத்திட்டம் கடனுதவி வழங்கியது.

இத்திட்டத்தின் கீழ், 2021 செப்டம்பா் 24-ஆம் தேதி வரை வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2.86 லட்சம் கோடியை தாண்டியது. மொத்தம் வழங்கப்பட்ட கடன் உத்தரவாதத்தில், 95 சதவீதம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

தகுதியான தொழில் துறைகளுக்கு தொடா்ந்து கடனுதவி கிடைப்பதை உறுதி செய்ய, அவசரகால கடனுதவித் திட்டத்தை நீட்டிக்க வேணடும் என அரசுக்கு பல தொழில் துறை அமைப்புகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அதன் அடிப்படையில், இந்தத் திட்டத்தை வரும் 2022-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பது அல்லது இத்திட்டத்தின் கீழ் உத்தரவாத கடன் தொகை ரூ.4.5 லட்சம் கோடி இலக்கை எட்டுவது இதில் எது முன்போ அதுவரை இத்திட்டத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரூ.7,500 கோடியை 75 நாள்களுக்குள் வங்கிகள் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT