இந்தியா

கோவேக்ஸின் அனுமதி குறித்து அக்டோபரில் முடிவு: உலக சுகாதார அமைப்பு தகவல்

30th Sep 2021 01:45 PM

ADVERTISEMENT

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது குறித்து அக்டோபர் மாதத்தில் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உலக அளவில் பல்வேறு நாடுகள் தயாரிக்கும் தடுப்பூசிகள் குறித்து ஆய்வு செய்து உலக சுகாதார நிறுவனம் அவசர கால பயன்பாட்டுக்கு(emergency use listing -EUL) அனுமதி அளித்து வருகிறது. 

இந்தியா தனது சொந்த தயாரிப்பான கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய தடுப்பூசிகளை மக்களுக்கு அளித்து வருகிறது. இதில், கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், கோவேக்ஸினுக்கு இன்னும் உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கவில்லை. 

இதனால் கோவேக்ஸின் தடுப்பூசி போட்டவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலையும் உள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாடு அனுமதி பெற பாரத் பயோடெக் நிறுவனமும் உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தி வருகிறது. 

ADVERTISEMENT

இந்நிலையில், கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது குறித்து அக்டோபர் மாதத்தில் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்பத்தை பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தடுப்பூசி தொடர்பான எந்தவொரு கேள்விக்கும் விளக்கமளிக்க தயாராக இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Tags : vaccine covaxin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT