இந்தியா

கரோனா 3ஆம் அலை எச்சரிக்கை: பட்டாசு வெடிக்க தடை விதித்த ராஜஸ்தான் அரசு

30th Sep 2021 08:26 PM

ADVERTISEMENT

கரோனா மூன்றாம் அலை அச்சுறுத்தல் தொடர்பாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு பயன்பாடு மற்றும் விற்பனைக்கு தடை விதித்து ராஜஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் மூன்றாம் அலை எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க | ‘கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி’: திரிணமூல் காங்கிரஸ்

அதன் ஒருபகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தின் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை மாநிலத்தில் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருள்களை வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக தில்லி அரசு 2022ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Rajasthan coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT