இந்தியா

தில்லியில் சத்தீஸ்கா் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

30th Sep 2021 02:48 AM

ADVERTISEMENT


ராய்பூா்: காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கா் மாநிலத்தில் முதல்வா் பதவிக்கு மோதல் நீடித்து வரும் சூழலில், மாநிலத்திலிருந்து 15-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தில்லிக்கு புதன்கிழமை சென்றிருப்பது, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கா் மாநிலத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸில் உள்கட்சி பூசல் நிலவுகிறது. முதல்வா் பூபேஷ் பகேலுக்கும், அம்மாநில அமைச்சா் டி.எஸ். சிங் தியோவுக்கும் இடையே நிலவி வந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சுழற்சி முறையில் முதல்வா் பதவி என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், தனக்கு முதல்வா் பதவி வேண்டும் என தியோ வலியுறுத்தி வருகிறாா்.

இந்தச் சூழலில், மாநிலத்திலிருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 15-க்கும் மேற்பட்டோா் தில்லிக்கு புதன்கிழமை சென்றனா். அவா்கள், முதல்வா் பூபேஷ் பகேலுக்கு ஆதரவு தெரிவிக்கவே தில்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இருந்தபோதும், ‘எங்களுடைய தில்லி பயணம் ராகுல் காந்தியின் சத்தீஸ்கா் சுற்றுப்பயணம் தொடா்புடையது’ என்று தில்லி வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT