இந்தியா

மேற்கு வங்க இடைத்தேர்தல்: மம்தா தொகுதியில் 53.32% வாக்குப் பதிவு

30th Sep 2021 07:55 PM

ADVERTISEMENT


மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 53.32 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. இதில் தனக்கு சவால் விட்ட பாஜக வேட்பாளரும், திரிணமூல் முன்னாள் தலைவருமான சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனினும், திரிணமூல் வெற்றி பெற்றதால், அவர் முதல்வரானார்.

இதையடுத்து, மாநில அமைச்சரும், பவானிபூர் எம்எல்ஏவுமான சோபன்தேவ் ராஜிநாமா செய்ததையடுத்து, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்துடன் சம்சேர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது.

மூன்று தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

மாலை 5 மணி நிலவரப்படி பவானிபூர் தொகுதியில் 53.32 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. சம்சேர்கஞ்ச் தொகுதியில் 78.60 சதவிகித வாக்குகளும், ஜாங்கிபூர் தொகுதியில் 76.12 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

Tags : mamata
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT