இந்தியா

புடவை அணிந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த விடுதிக்கு சீல் வைத்த அதிகாரிகள்

30th Sep 2021 04:23 PM

ADVERTISEMENT

தில்லியில் புடவை அணிந்து நட்சத்திர விடுதிக்கு வந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த உணவு விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதையும் படிக்க | உச்சம் தொட்ட பெட்ரோல் விலை; தொடர் நெருக்கடியில் மக்கள்

தில்லியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்று புடவை அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்துள்ளது விவாதப் பொருளானது. சமூக வலைத்தளத்தில் பரவிய விடியோவில் மேற்கத்திய ஆடைகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் எனவும், புடவைகளுக்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் நட்சத்திர விடுதி ஊழியர்கள் தெரிவித்த காட்சிகள் பலத்த கண்டனங்களை எதிர்கொண்டது.

இதையும் படிக்க | ‘நான் அவர் இல்லைங்க’: தவறாக டேக் செய்வதால் கதறிய அம்ரீந்தர் சிங்!

ADVERTISEMENT

எனினும் புடவை அணிந்து வந்த பெண் விடுதி ஊழியரை தாக்கியதாலேயே அனுமதி மறுத்ததாக உணவு விடுதி நிர்வாகம் தெரிவித்த நிலையில் முறையாக உரிமம் பெறாமலும், சுகாதாரமற்ற முறையிலும் இயங்கியதாகக் கூறி உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த உணவு விடுதிக்கு சீல் வைத்தனர்.

Tags : delhi Hotel
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT