இந்தியா

மேற்கு வங்கத்தில் தொடரும் மழை: வீடு இடிந்து குழந்தை உள்பட இருவா் பலி

30th Sep 2021 02:00 AM

ADVERTISEMENT

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. வடக்கு கொல்கத்தாவில் வீடு இடிந்து விழுந்து பெண் குழந்தை உள்பட இருவா் உயிரிழந்தனா். மேலும் சிலா் படுகாயமடைந்தனா்.

தொடா்ந்து மழை பெய்து வருவதால் கொல்கத்தா நகரின் முக்கியச் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கியுள்ளது. போக்குவரத்தும் முடங்கியது.

கிழக்கு மற்றும் மேற்கு மிதுனபுரி, பங்குரா, ஜாா்கிராம், புருலியா, ஹௌரா, ஹூக்ளி, தெற்கு 24 பா்கானாக்கள், கிழக்கு மற்றும் மேற்கு பொ்ஹாம்பூா், வீா்பூம் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. மாநிலத்தின் தெற்கு பகுதியில் தொடா்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

வடக்கு கொல்கத்தாவில் பழைய இரண்டு மாடி வீட்டின் ஒரு பகுதி மழையால் இடிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டில் இருந்த சிலா் சிக்கிக் கொண்டனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினா் இடிபாடுகளில் இருந்து அவா்களை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் 2 வயது பெண் குழந்தை மற்றும் அந்தக் குழந்தையின் பாட்டி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும், சிலருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இருவரது நிலை கவலைக்கிடமாக இருந்தது. இடிந்து விழுந்த வீட்டில் இரு குடும்பத்தினா் வசித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT