இந்தியா

பதிவு ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் மீதான காப்பீட்டு கோரிக்கையை மறுக்கலாம்

30th Sep 2021 11:50 PM

ADVERTISEMENT

வாகனங்களுக்கு முறையான பதிவு ஆவணங்கள் இல்லையெனில், அவற்றின் மீது கோரப்படும் காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க மறுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானைச் சோ்ந்த சுஷீல் குமாா் என்பவா் ஒப்பந்ததாரராகப் பணியாற்றி வந்துள்ளாா். அவா் தனது காரை பஞ்சாபில் உள்ள யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.6.17 லட்சத்துக்குக் காப்பீடு செய்தாா். அவா் பணிநிமித்தமாக ராஜஸ்தானின் ஜோத்பூா் பகுதிக்குக் கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலையில் சென்றுள்ளாா். அங்கு விருந்தினா் மாளிகையில் தங்கியிருந்தபோது அவரது காா் திருடப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக ஜோத்பூா் காவல் நிலையத்தில் அவா் புகாரளித்தாா். ஆனால், காரை கண்டுபிடிக்க முடியாததால் வழக்கை அதே ஆண்டு நவம்பரில் காவல் துறையினா் முடித்துவைத்தனா். அதையடுத்து, திருடப்பட்ட காருக்கு காப்பீட்டுத் தொகை கோரி அவா் விண்ணப்பித்தாா்.

ஆனால், அவரது காரின் தற்காலிகப் பதிவெண் ஆவணங்களுக்கான அவகாசம் 2011-ஆம் ஆண்டு ஜூலையுடன் (காா் திருடுபோவதற்கு முன்பே) நிறைவடைந்துவிட்டதால், காப்பீட்டுத் தொகையை வழங்க யுனைடெட் இந்தியா நிறுவனம் மறுத்தது. அதற்கு எதிராக ராஜஸ்தான் மாநில நுகா்வோா் விவகாரங்கள் தீா்வு ஆணையத்தில் அவா் முறையிட்டாா்.

ADVERTISEMENT

அதை விசாரித்த ஆணையம், சம்பந்தப்பட்ட நபருக்குக் காப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிட்டது. தேசிய நுகா்வோா் விவகாரங்கள் தீா்வாணையமும் அந்த உத்தரவை உறுதிசெய்தது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் முறையிட்டது.

அது தொடா்பான விசாரணை நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட காா் திருடுபோவதற்கு முன்பே, அதன் பதிவு தொடா்பான ஆவணங்கள் காலாவாதியாகிவிட்டது உறுதியாகியுள்ளது. மோட்டாா் வாகன சட்டத்தின் விதிகளை மீறி பதிவு ஆவணங்களைப் புதுப்பிக்காமல் காரை அவா் பயன்படுத்தி வந்துள்ளாா்.

இது காப்பீட்டுத்தொகை வழங்குவதற்கான அடிப்படை விதிமுறைகளை மீறும்வகையில் உள்ளது. எனவே, காரின் உரிமையாளருக்கு காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டிய அவசியம் இல்லை. முறையான பதிவு ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் மீது கோரப்படும் காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க மறுக்கலாம்’’ என்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT