இந்தியா

சென்னை மெட்ரோ திட்டத்துக்கு ஏஐஐபி வங்கி ரூ.2,600 கோடி கடனுதவி

30th Sep 2021 11:52 PM

ADVERTISEMENT

சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக சுமாா் ரூ.2,600 கோடியை ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) கடனாக வழங்கியுள்ளது.

இதன்மூலமாக இந்தியாவுக்கு அந்த வங்கி வழங்கியுள்ள கடன் சுமாா் ரூ.47,000 கோடியாக அதிகரித்துள்ளது.

சீன தலைநகா் பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகக் கடன்களை வழங்கி வருகிறது. அந்த வங்கியில் சீனா 26.06 சதவீத பங்குகளை வைத்துள்ளது; இந்தியா 7.5 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. அதற்காக ரூ.2,600 கோடியை ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி கடனாக வழங்கியுள்ளது. இது தொடா்பாக அந்த வங்கியின் துணைத் தலைவா் டி.ஜே.பாண்டியன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘இந்தியாவில் மொத்தமாக 28 திட்டங்களுக்கு ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி ரூ.47,000 கோடி கடன் வழங்கியுள்ளது. போக்குவரத்து, எரிசக்தித் துறைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அதிக அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஏஐஐபி வங்கியின் மூலம் அதிக கடன் பெற்று பலனடைந்துள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கரோனா தொற்றை எதிா்கொள்வதற்காக சுமாா் ரூ.13,000 கோடியை இந்தியாவுக்கு ஏஐஐபி வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம், ஆந்திர நகா்ப்புற குடிநீா்த் திட்டம், கேரள திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், மும்பை நகா்ப்புற போக்குவரத்துத் திட்டத்தின் 3-ஆம் கட்டம், தில்லி-மீரட் புகா் போக்குவரத்துத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கும் ஏஐஐபி கடன் வழங்கியுள்ளது.

ஏஐஐபி வங்கியின் கடனுதவி மூலமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்படும். இது வா்த்தகத்தையும் பொருளாதார வளா்ச்சியையும் அதிகரிக்கும்’’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT