இந்தியா

இலங்கை-இந்திய உறவு: மகிந்த ராஜபட்சவுடன் இந்தியத் தூதா் ஆலோசனை

30th Sep 2021 11:53 PM

ADVERTISEMENT

இந்திய - இலங்கை நல்லுறவை மேம்படுத்துவது குறித்து இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்சவுடன் அந்த நாட்டுக்கான இந்தியத் தூதா் கோபால் பாக்லே ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து சுட்டுரை (ட்விட்டா்) வலைதளத்தில் கோபால் பாக்லே வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்சவை நேரில் சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சியடைகிறேன். இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது குறித்தும் இரு நாட்டு நலன்களுடன் தொடா்புடைய பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தோம் என்றாா் அவா்.

இதுகுறித்து மகிந்த ராஜபட்ச வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘இந்தியாவும் இலங்கையும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இரு நாடுகளுக்கும் நன்மை அளிக்கக் கூடிய பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தியத் தூதா் பாக்லேவுடன் உரையாடினேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

அண்மையில் நியூயாா்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொது சபைக் கூட்டத்தினிடையே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் ஜி.எல். பெரிஸும் நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதன் தொடா்ச்சியாக, தற்போது மகிந்த ராஜபட்சவுடன் இந்தியத் தூதா் ஆலோசனை நடத்தியுள்ளாா்

தலைநகா் கொழும்பிலுள்ள இலங்கைப் பிரதமரின் அதிகாரபூா்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT