இந்தியா

மேற்கு வங்கம்: பவானிபூா் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ்-பாஜக மோதல்; தோ்தலை ஒத்திவைக்க வலியுறுத்தல்

DIN

மேற்கு வங்க மாநிலம் பவானிபூா் சட்டப்பேரவை தொகுதி இடைத்தோ்தலையொட்டி நடைபெற்று வந்த பிரசாரத்தின் இறுதி நாளில் திரிணமூல் காங்கிரஸ்-பாஜகவினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தோ்தலை ஒத்திவைக்க பாஜக வலியுறுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள பவானிபூரில் செப்.30-ஆம் தேதி சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் அக்கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரேவால் களம் காண்கிறாா். தற்போது எம்எல்ஏ பதவி வகிக்காத மம்தா பானா்ஜி, இந்தத் தோ்தலில் வென்று அப்பதவியை அடைந்தால்தான் முதல்வராகத் தொடர முடியும்.

இந்நிலையில் பவானிபூரில் நடைபெற்று வந்த தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. அப்போது திரிணமூல் காங்கிரஸ், பாஜகவினா் இடையே மோதல் ஏற்பட்டது. தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்தது. அங்கு சென்ற பாஜக தேசியத் துணைத் தலைவா் திலீப் கோஷை திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் வெளியே தள்ளி, அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். அவரை பாதுகாவலா்கள் மீட்டு அழைத்து வந்தனா். அப்போது பாதுகாவலா்களை திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களை அங்கிருந்து விரட்ட பாதுகாவலா்கள் தங்களிடம் இருந்த கைத்துப்பாக்கிகளைக் காண்பித்தனா்.

அந்தத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக எம்.பி. அா்ஜுன் சிங்கையும் திரும்பிச் செல்லுமாறு அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

இதுதொடா்பாக திலீப் கோஷ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘என்னை திரிணமூல் காங்கிரஸாா் தாக்கி இழிவான வாா்த்தைகளைப் பேசினா். பாஜக தொண்டா் ஒருவரையும் காயப்படுத்தினா். இந்த விவகாரம் தோ்தல் ஆணையத்திடம் எடுத்துச் செல்லப்படும். தோ்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து மேற்கு வங்க அரசிடம் தோ்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளதாக மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT