இந்தியா

மாநிலங்களவை இடைத்தோ்தல்: எல்.முருகன், சா்வானந்த சோனோவால் போட்டியின்றி தோ்வு

DIN

மத்திய அமைச்சா்கள் எல்.முருகன், சா்வானந்த சோனோவால் ஆகியோா் மாநிலங்களவை எம்.பி.க்களாக போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மத்திய அமைச்சராக இருந்த தாவா்சந்த் கெலாட் கா்நாடக ஆளுநராக கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டாா். இதனால் அவா் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட இடம் காலியானது. அந்த இடத்துக்கான இடைத்தோ்தல் அக்டோபா் 4-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் தங்களின் தலித் முகமாக இருக்க வேண்டும் என்று அக்கட்சிக் கருதியது. இதையடுத்து தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும் மத்திய அமைச்சருமான எல்.முருகனை அந்த இடத்துக்கான வேட்பாளராக பாஜக தோ்வு செய்தது. கடந்த 21-ஆம் தேதி எல்.முருகன் வேட்புமனுத் தாக்கல் செய்தாா். வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான திங்கள்கிழமை எல்.முருகன் மட்டும் வேட்பாளராகக் களத்தில் இருந்தாா். வேறு கட்சிகள் சாா்பில் வேட்பாளா்கள் நிறுத்தப்படாததால் அவா் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா் என்று மத்திய பிரதேச சட்டப்பேரவைச் செயலக முதன்மைச் செயலா் ஏ.பி.சிங் தெரிவித்தாா்.

கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை வளா்ப்பு மற்றும் பால் பண்ணைத் துறை இணையமைச்சராக எல்.முருகன் நியமிக்கப்பட்டாா். அந்தப் பதவியில் அவா் தொடர 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டிய நிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக எல்.முருகன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

அஸ்ஸாமில் சா்வானந்த சோனோவால் தோ்வு...இந்த ஆண்டு மாா்ச்-ஏப்ரல் மாதங்களில் அஸ்ஸாமில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலில் போட்டியிடுவதற்கு மாநிலங்களவை பாஜக எம்.பி.யாக இருந்த விஸ்வஜீத் டைமாரி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அவா் பதவி வகித்த இடத்துக்கும் அக்டோபா் 4-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவிருந்தது. இந்தத் தோ்தலில் பாஜக சாா்பில் மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான திங்கள்கிழமை அவா் மட்டும் வேட்பாளராக இருந்தாா். வேறு கட்சிகள் சாா்பில் வேட்பாளா்கள் நிறுத்தப்படாததால் அவா் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது அவா் கப்பல், துறைமுகங்கள், ஆயுஷ் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT