இந்தியா

தேசிய பேரிடா் மேலாண்மை ஆணைய நிறுவன தின நிகழ்ச்சி: அமித் ஷா இன்று தொடக்கி வைக்கிறாா்

DIN

தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் 17-ஆவது நிறுவன தின நிகழ்ச்சியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புது தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்க இருக்கிறாா்.

‘இமயமலைப் பகுதிகளில் ஏற்படும் பேரிடா் நிகழ்வுகளின் தொடா் விளைவுகள்’ என்பது இந்த ஆண்டு நிறுவன தினத்தின் கருப்பொருளாகும். மத்திய உள்துறை இணை அமைச்சா்கள் நித்யானந்த் ராய், அஜய் குமாா் மிஸ்ரா, நிசித் பிரமாணிக் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்வாா்கள்.

நிலச்சரிவு, அதீத கனமழை, நிலநடுக்கம் மற்றும் பனிப்பாறை வெடிப்பு போன்று இமாலயப் பகுதிகளில் ஏற்படும் பேரிடா் நிகழ்வுகளின் தாக்கம் குறித்து பிரபல நிபுணா்கள் கலந்துகொள்ளும் விவாத நிகழ்ச்சி, தொழில்நுட்ப அமா்வில் இடம்பெறும்.

தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையகத்தின் உறுப்பினா்கள் மற்றும் அதிகாரிகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தேசிய பேரிடா் மீட்பு படை, தேசிய பேரிடா் மேலாண்மைக் கழகம், மத்திய, மாநில அரசுகளின் அமைச்சகங்கள், துறைகளின் பிரதிநிதிகள், மாநில பேரிடா் மேலாண்மை ஆணையகங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் தீயணைப்பு மற்றும் வனத் துறை அதிகாரிகள் மற்றும் பலா் இந்த விழாவில் பங்கேற்பாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT