இந்தியா

11 நிலக்கரி சுரங்கங்களுக்கான இணையவழி ஏலம் தொடக்கம்

DIN

முதல் முயற்சியில் ஏலம் போகாத 11 நிலக்கரி சுரங்கங்களை வணிக நோக்கில் ஏலம் விடுவதற்கான 2-ஆவது முயற்சி இணையவழியில் திங்கள்கிழமை தொடங்கியது.

நிலக்கரி சுரங்கங்களை வணிக நோக்கில் ஏலம் விடுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 38 சுரங்கங்களை ஏலம் விடுவதற்கு மத்திய நிலக்கரி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அவற்றில் 19 சுரங்கங்கள் ஏற்கெனவே ஏலம் விடப்பட்டுவிட்டன.

கடந்த ஆகஸ்டில் 8 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டன. அந்த ஏலத்தின் வாயிலாக சராசரியாக 30 சதவீதம் வரை வருவாய்ப் பங்கீடு கிடைத்ததாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்திருந்தது.

கடந்த மாா்ச்சில் நடைபெற்ற ஏலத்தின்போது 11 சுரங்கங்களுக்கு ஒற்றை ஏலதாரா் மட்டுமே விண்ணப்பித்ததால், அந்தச் சுரங்கங்கள் ஏலம் விடப்படவில்லை. தற்போது அந்த சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான 2-ஆவது முயற்சியை மத்திய நிலக்கரி அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இணையவழியிலான ஏலம் திங்கள்கிழமை தொடங்கியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. வருவாய்ப் பங்கீடு சதவீதத்தின் அடிப்படையில் 2 நிலைகளில் வெளிப்படைத்தன்மையுடன் ஏலம் நடத்தப்படும் என்றும் அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்குப் பல்வேறு சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றின்படி, அந்நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கப் பணியில் முன் அனுபவம் தேவையில்லை. வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியைப் பயன்படுத்துவதில் நெகிழ்வுத்தன்மை, விரைவாக உற்பத்தி செய்தால் ஊக்கத்தொகை, தூய்மையான நிலக்கரி உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட சலுகைகளும் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT