இந்தியா

தமிழகத்தின் 'நாகநதி' குறித்துப் பேசிய பிரதமர் மோடி!

26th Sep 2021 12:30 PM

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள நாகநதியை சீர்படுத்திய அப்பகுதி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உரையாற்றி வருகிறார். 

இன்று 81 வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இன்று உலக ஆறுகள் தினம்(செப்.26) குறித்துப் பேசினார். 

நம் நாட்டில் உள்ள ஆறுகளுடன் தொடர்புடைய பாரம்பரியங்களை இணைக்க ஆண்டுதோறும் உலக ஆறுகள் தினத்தன்று 'நதி விழாவை' கொண்டாட பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

ADVERTISEMENT

இந்நிலையில், தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓடக்கூடிய நாகநதி குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வறண்டு விட்டதாகவும் அங்குள்ள பெண்கள் மக்களை இணைத்து கால்வாய்களைத் தோண்டி தடுப்பணைகளை உருவாக்கிய அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். 

மேலும், நதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும் என்றும் தெரிவித்தார். 

மிகப்பெரும் நதியான கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். 

திருவண்ணாமலையின் நாகநதி, ஜவ்வாது மலையில் உருவாகி ஆரணி வழியாக வாழைப்பந்தல் எனும் இடத்தில் செய்யாற்றில் கலக்கிறது. இந்த ஆறு ஆரணி தாலுகா மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

இதையும் படிக்க | உலக ஆறுகள் தினம்: 'நதி விழாவை' கடைப்பிடிக்க மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

Tags : pm modi rivers day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT