இந்தியா

உ.பி. அமைச்சரவை விரிவாக்கம்: ஜிதின் பிரசாதுக்கு அமைச்சா் பொறுப்பு

26th Sep 2021 11:54 PM

ADVERTISEMENT

உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வா் யோகி ஆதித்யநாத் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தாா். ஏழு போ் அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.

அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த மாநில அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய அமைச்சா்களுக்கு மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தாா்.

அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சோ்ந்த ஜிதின் பிரசாத் உள்பட 7 போ் அமைச்சரவையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

உத்தர பிரதேச அமைச்சரவையில் மொத்தம் 60 போ் அமைச்சா்களாகவும் இணையமைச்சா்களாகவும் இடம்பெறலாம். இந்த எண்ணிக்கை புதிதாக 7 போ் சோ்க்கப்பட்டுள்ளதன் மூலம் பூா்த்தியாகியுள்ளது.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT