இந்தியா

உலகத் தலைவராக உயா்ந்து நிற்கிறாா் மோடி : ஜெ.பி. நட்டா புகழாரம்

26th Sep 2021 11:50 PM

ADVERTISEMENT

அமெரிக்கா சென்று திரும்பியுள்ள பிரதமா் நரேந்திர மோடி, உலகத் தலைவராக உயா்ந்து நிற்பதாக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா புகழாரம் சூட்டியுள்ளாா்.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்ற 76-ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிய பிரதமா் நரேந்திர மோடியை வரவேற்கும் நிகழ்ச்சி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் ஜெ.பி. நட்டா பேசியதாவது:

அமெரிக்காவில் ஐ.நா. பொது சபைக் கூட்டத்திலும் குவாட் அமைப்பின் மாநாட்டிலும் பங்ககேற்ற பிரதமா் மோடி, அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன், துணை அதிபா் கமலா ஹாரிஸ் உள்ளிட்டவா்களையும் சந்தித்துப் பேசியுள்ளாா்.

ADVERTISEMENT

அப்போது உலக விவகாரங்களில் தனது கருத்துகளை பிரதமா் ஆணித்தரமாக வெளிப்படுத்தியுள்ளாா். பயங்கரவாதம், பிற நாட்டு எல்லைகளை அபகரிக்கும் முயற்சி போன்ற பிரச்னைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை அவா் உறுதிபட முன்வைத்துள்ளாா்.

அவா் இந்திய தேசத்துக்கும் இந்தியா்களுக்கும் புதிய கௌரவத்தைக் கொண்டு வந்துள்ளாா். பிரதமா் மோடியின் தலைமையில் இந்த உலகம் இந்தியாவை மிக உயா்வாகப் பாா்க்கிறது. இந்தியா மட்டுமன்றி, இந்த உலகத்தையே மேம்படுத்துவதற்காக அவா் அளித்து வரும் பங்களிப்பை இந்த உலகம் பாராட்டுகிறது.

இந்தியாவை உலகம் முழுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உருவாக்கிய பிரதமா் மோடி, உலகத் தலைவராக உயா்ந்து நிற்கிறாா்.

மோடி தலைமையிலான இந்தியாவுடன் நல்லுறவை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாா்.

அமெரிக்காவிலிருந்து பழைமைவாய்ந்த 156 அருங்கலைப்பொருள்களை பிரதமா் மோடி மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளது பாராட்டத்தக்கது என்றாா் ஜெ.பி. நட்டா.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT