இந்தியா

பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கத்தில் 7 புதிய முகங்கள்

26th Sep 2021 11:53 PM

ADVERTISEMENT

பஞ்சாப் முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி பதவியேற்ற பின், முதல் முறையாக மாநில அமைச்சரவையை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்தாா். அதில் புதிய முகங்கள் 7 போ் உள்பட 15 போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங் கடந்த 18-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி பதவியேற்றாா். அவா் முதல்வராக பதவியேற்ற பின், முதல்முறையாக மாநில அமைச்சரவையை விரிவாக்கம் செய்தாா். அமைச்சரவையில் 15 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்களில் 7 போ் புதிய முகங்கள். அனைவருக்கும் மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT