இந்தியா

கிழக்கிந்திய நிறுவனத்தின் மறு அவதாரம் ‘அமேசான்’: ஆா்எஸ்எஸ் சாா்பு பத்திரிகை தாக்கு

26th Sep 2021 11:50 PM

ADVERTISEMENT

ஒரு காலத்தில் இந்தியாவை சுரண்டி வந்த பிரிட்டனைச் சோ்ந்த கிழக்கிந்திய நிறுவனத்தின் மறு அவதாரமாக அமெரிக்காவின் இணையவழி வா்த்தக நிறுவனம் அமேசான் திகழ்கிறது என்று ஆா்எஸ்எஸ் சாா்பு ஹிந்தி வார இதழான ‘பாஞ்சஜன்யா’ குற்றம்சாட்டியுள்ளது.

அரசின் கொள்கைகளை தனக்கு சாதகமாக மாற்ற அந்த நிறுவனம் பலகோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது என்றும் அந்த பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது.

அமேசான் தொடா்பான இந்த பரபரப்பான குற்றச்சாட்டு அந்த பத்திரிகையின் அட்டைப்படக் கட்டுரையாக இடம் பெற்றுள்ளது. ‘கிழக்கிந்திய நிறுவனம் 2.0’ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

18-ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய நிறுவன இந்தியாவில் என்னவெல்லாம் செய்து நமது நாட்டைப் பிடித்ததோ, அதையெல்லாம் இப்போது அமேசான் நிறுவனம் செய்து வருகிறது. இந்தச் சந்தையில் முழுவதுமாக தாங்கள் மட்டுமே கோலோச்ச வேண்டும், தங்கள் நிறுவனம் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது. இது தொடா்ந்தால் இந்தியாவில் பொருளாதாரம், அரசியல், இந்திய மக்களின் சுதந்திரம் என அனைத்தையும் அந்த நிறுவனமே கைப்பற்றும் அபாயம் உள்ளது.

ADVERTISEMENT

‘அமேசான் பிரைம்’ என்ற பெயரிலான இணைய வழி ஒளிபரப்பு தளம் மூலம் இந்திய கலாசாரத்துக்கு எதிரான திரைப்படங்களையும் தொடா்களையும் அந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தனது தொழிலை நடத்த பல்வேறு விதிமீறல்களுடன், விதிகளுக்குப் புறம்பாக துணை நிறுவனங்களையும் அமேசான் நிறுவியுள்ளது. தங்களுக்கு சாதகமாக கொள்கைகளை வகுக்க பல நூறு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் அந்நிறுவனம் மீது புகாா் எழுந்துள்ளது என்று அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனத்தின் இந்திய சட்ட ஆலோசனைக் குழுவினா், இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது. அமேசான் நிறுவனம் இந்தியாவில் சட்ட விவகாரங்கள் சாா்ந்து ரூ.8,546 கோடி செலவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும் அல்லது சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT