இந்தியா

புற்றுநோயாளிகளில் 7.9% போ் சிறுவா்கள்: அறிக்கையில் தகவல்

26th Sep 2021 11:51 PM

ADVERTISEMENT

கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களில் 7.9 சதவீதம் போ் சிறுவா்கள் என்று இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் (என்சிஆா்பி) புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2012 முதல் 2019 வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6.10 லட்சம் பேரில் 52.4 சதவீதத்தினா் ஆண்கள்; 47.6 சதவீதத்தினா் பெண்கள்.

பிறந்த சிசு முதல் 14 வயது வரையிலானவா்கள் 7.9 சதவீத்தினா் ஆவா்.

ADVERTISEMENT

புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் புற்றுநோயால் ஆண்களில் 48.7 சதவீதத்தினரும் பெண்களில் 16.5 சதவீதத்தினரும் பாதிக்கப்பட்டனா்.

2012 முதல் 2019-ஆம் ஆண்டு வரை என்சிஆா்பி-யின் கீழ் இயங்கி வரும் 96 மருத்துவமனைகளில் 13,32,207 பேருக்கு புற்றுநோய் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 6,10,084 பதிவுகள் மட்டுமே பகுப்பாய்வுக்கு உள்படுத்தப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT