இந்தியா

உத்தரப் பிரதேசம் : டெங்குவால் 6,488 பேர் மருத்துவமனையில் அனுமதி

24th Sep 2021 05:56 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 6,488 பேர் டெங்குவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முக்கியமாக பிரோசாபாத் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 42 சிறார்கள் உட்பட 70 பேர் உயிரிழந்திருப்பதை அம்மாநில சுகாதாரத் துறை உறுது செய்திருக்கிறது .

மதுரா மாவட்டத்தின் கோன் கிராமத்தில் கடந்த ஆக- 24 ஆம் தேதி  அடையாளம்  தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகியிருந்தார்கள். பின் மர்ம காய்ச்சலின் அறிகுறியும் டெங்குவின் அறிகுறியும் ஒன்றாக இருந்ததால் டெங்கு காய்ச்சல் என்றே மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

இதையும் படிக்க | மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ள பிரதமர் மோடி

ADVERTISEMENT

பின் மதுரா, ஆக்ரா, பிரோசாபாத் பகுதிகளில்  மர்ம காய்ச்சலால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

தற்போது நேற்று (செப்-23) டெங்கு அறிகுறியுடன் 6,488 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றிருக்கிறார்கள்.அதில் 70 சதவீதம் பேர் ஆகஸ்ட் , செப்டம்பர் மாதத்தில் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்நிலையில் மாநிலத்தின் சில மாவட்டங்களில் 12,000 பேர் வரை காய்ச்சலுடன் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags : dengue uttar pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT