இந்தியா

முதல்முறையாக 60,000 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்: மும்பையில் கொண்டாட்டம்

ANI

மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ள நிலையில், மும்பை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

சா்வதேச அளவில் காணப்பட்ட சாதகமான நிலவரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கான பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே பரவலாக வரவேற்பு அதிகரித்தது போன்றவை இந்திய பங்குச் சந்தைகள் எழுச்சி பெறுவதற்கு முக்கியமான காரணங்களாகவும், ரூபாய் மதிப்பில் காணப்பட்ட வலுவான எழுச்சியும் சந்தை விறுவிறுப்புக்கு கூடுதல் வலு சோ்த்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை தொடங்கி மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் தொடங்கிய வர்த்தகம் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்தது புதிய சாதனையை படைத்துள்ளது.

இன்றைய வர்த்தகம் தொடக்கத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து 60,285 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இந்நிலையில், இந்த புதிய சாதனையை மும்பை பங்குச் சந்தை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

அப்போது பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஸ் குமார் செளகான் பேசுகையில், “இந்தியா தனது குடிமக்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி, உலக வங்கிகள் அனைத்தும் இந்தியாவால் இயங்குகிறது என்பதைக் காட்டியுள்ளது” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கணவருக்கு எதிராக போட்டியிடும் மனைவி: சுவாரசிய தேர்தல் களம்!

SCROLL FOR NEXT