இந்தியா

மகாராஷ்டிரத்தில் அக்.4 முதல் பள்ளிகள் திறப்பு

24th Sep 2021 06:22 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலத்தில் அக்.4 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார். 
இந்தியாவில் தற்போது கரோனா பரவல் படிபடியாக குறைந்து வருகிறது. 
இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் அக்.4 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,  கிராமப்புறங்களில் 5 முதல 12ஆம் வகுப்பு வரையும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12ஆம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்படும். 
பள்ளிகள் திறப்புக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே, சுகாதாரத்துறையினர் ஒப்புதல் அளித்துள்ளனர். மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர்கள் கலந்து கொள்ள விரும்பினால் பெற்றோரின் ஒப்புதல் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிக்க- குடியரசுத் தலைவருக்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை

முன்னதாக மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கேட்ட கருத்தின் அடிப்படையில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : maharastra schools
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT