இந்தியா

மணிப்பூர் பழங்குடி தலைவர் கொலை: 16 பேர் பணியிடை நீக்கம்

DIN

மணிப்பூரில் பழங்குடியினர் கவுன்சில் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை 16 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜீலியன்ராங் பவுடி அமைப்பானது மணிப்பூர், அசாம் மற்றும் நாகாலாந்தில் உள்ள பழங்குடியினரை பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் முன்னாள் தலைவராக செயல்பட்டவர் அதுவான் அபோன்மாய்.

செப்டம்பர் 22ஆம் தேதி மணிப்பூரின் தமேங்லாங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஆயுதக் குழுவால் கடத்தப்பட்ட இவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுதொடர்பாக பேசிய மாநில முதல்வர் பிரேன் சிங் அதுவான் அபோன்மாயின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் இந்த விவகாரத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க மாநில காவல்துறை தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவித்த அவர் இதுவரை 16 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.

அபோன்மாயின் கொலைக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

SCROLL FOR NEXT