இந்தியா

8 மணி நேரமாகக் குறைந்த வேலைநேரம்: மகாராஷ்டிர பெண் காவலர்கள் மகிழ்ச்சி

24th Sep 2021 06:25 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களின் பணி நேரத்தை 12 மணியிலிருந்து 8 மணி நேரமாக குறைத்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய நகரங்களின் காவலர்களுக்கான பணிநேரம் 12 மணிநேரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநில காவல்துறை தலைவரின் சமீபத்திய அறிவிப்பு பெண் காவலர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இதையும் படிக்க | குடியரசுத் தலைவருக்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை

12 மணி நேரமாக நீடித்துவரும் பணி நேரத்தால் தங்களது குடும்பங்களுடன் நேரத்தை செலவிட முடிவதில்லை என பெண்காவலர்கள் தெரிவித்துவந்தனர். 
இதனைத் தொடர்ந்து பெண் காவலர்களுக்கான பணிநேரம் 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாகக் குறைக்கப்படுவதாக காவல்துறை துறை தலைவர் அறிவித்தார்.

ADVERTISEMENT

நாக்பூர், புணே, அமராவதி மற்றும் நவி மும்பை உள்ளிட்ட பகுதிகளில் வேலை நேரம் 8 மணி நேரமாக உள்ள நிலையில் டிஜிபியின் அறிவிப்பு மேலும் இதற்கு வலுசேர்த்துள்ளதாக பெண் காவலர்கள் தெரிவித்தனர். 

Tags : Women police Maharastra
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT