இந்தியா

ம.பி.யில் கார் ஓட்டப் பழகும் 90 வயது பாட்டி: குவியும் பாராட்டு

ANI


தேவாஸ்: மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில், 90 வயது பாட்டி ஒருவர் கார் ஓட்டப் பழகும் புகைப்படமும் விடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பிலாவாலி பகுதியைச் சேர்ந்த ரேஷம் பாய் தன்வார், இது குறித்து கூறுகையில், எனது குடும்பத்தில் மகள், மருமகள் உள்பட அனைவருக்குமே கார் ஓட்டத் தெரியும். அதனால்தான் நானும் கார் ஓட்டப் பழகுகிறேன் என்கிறார் துள்ளலோடு.

எனக்கு வாகனங்களை இயக்குவது மிகவும் பிடிக்கும். கார்களையும் ஓட்டுவோம் கூடவே டிராக்டர்களையும் இயக்குவேன் என்கிறார்.

இதனைப் பார்த்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான், 90 வயதில் கார் ஓட்டப் பழகும் பாட்டியின் தன்னம்பிக்கை அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவதாகப் பாராட்டியுள்ளார்.

நமது விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்ள வயது எப்போதுமே தடையில்லை என்பதை இந்த பாட்டி நிரூபிக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT