இந்தியா

பிகார் : முதல் திருநம்பிக் காவலர் நியமனம்

23rd Sep 2021 11:14 AM

ADVERTISEMENT

பிகார் மாநிலத்தில்  திருநம்பி ஒருவருக்கு காவலருக்கான பணி நியமன ஆணையை அம்மாநில காவல்துறை வழங்கியிருக்கிறது.

பிகார் மாநிலம் கைமுர் மாவட்டத்தின் ரகசியப்பிரிவு காவலாரக ரஜித் ராஜ்(23) என்கிற திருநம்பி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவரே பிகாரின் முதல் திருநம்பிக் காவலர் ஆவார்.

இதையும் படிக்க | ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

இதுகுறித்து ரஜித் ராஜ் , ‘ பெண்ணாகப் பிறந்தாலும் என்னுடயை 17-வது வயதில் எனக்குள் இருக்கும் ஆண் தன்மையை உணர ஆரம்பித்தேன். தற்போது முழு ஆணாகவே என்னை உணர்வதால் பெயரை மாற்றிக்கொண்டு காவலர் தேர்விற்கு விண்ணப்பித்தேன். இந்தாண்டு தேர்வில் வென்று கைமுர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரகசியப்பிரிவு காவலராக தேர்வாகியிருக்கிறேன். இருப்பினும் என்னுடயை கல்வி சான்றிதழ்களில் பெண் என்கிற அடையாளமே தொடர்கிறது’ எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : Transgender Bihar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT