இந்தியா

பிரதமர் மோடியுடன் அடோபி தலைவர் சந்திப்பு

23rd Sep 2021 09:17 PM

ADVERTISEMENT

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அடோபி தலைவர் சாந்தனு நாராயணை வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்ச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

இதையும் படிக்க | மணிப்பூரில் கடத்தப்பட்ட பழங்குடியினர் கவுன்சில் தலைவர் சடலமாக மீட்பு

இந்நிலையில் வியாழக்கிழமை பல்வேறு நிறுவனங்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அடோபி தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயணை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். 

ADVERTISEMENT

இந்தியாவின் முன்னணி திட்டமான டிஜிட்டல் இந்தியா மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் எதிர்கால முதலீட்டு திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதையும் படிக்க | அரசு நிதி அல்ல, பிஎம் கேர்ஸ் நிதி: நீதிமன்றத்தில் தகவல்

அதேபோல் குவால்காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டியானோ அமோனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். 

இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் மின்னணு துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் மின்னணு அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்கு சமீபத்தில் தொடங்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் மற்றும் இந்திய செமி கண்டக்டர் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்டவற்றை இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

Tags : modi Adobe
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT