இந்தியா

‘தலித்தை முதல்வராக்கி ராகுல் வரலாற்றை உருவாக்கியுள்ளார்’: சித்து

ANI

தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்முறையாக முதலமைச்சராக்கி ராகுல் காந்தி வரலாற்றை உருவாக்கியுள்ளார் என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து திங்கள்கிழமை தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதுகுறித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து பேசியது,

“பஞ்சாபில் முதல் தலித் சீக்கியரை முதல்வராக்கி ராகுல் காந்தி வரலாற்றை உருவாக்கியுள்ளார். ஓர் அற்புதமான நபர் இன்று முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார். பொதுமக்களின் நலன் சார்ந்த பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். மின்சாரக் கட்டண தள்ளுபடி உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும்.”

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங்குக்கும், அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், அமரீந்தா் சிங்கின் எதிா்ப்பை மீறி சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கட்சித் தலைமை கடந்த ஜூலை மாதம் நியமித்தது. அதன்பிறகு இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இந்தச் சூழலில், அமரீந்தா் சிங் தனது முதல்வா் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

காங்கிரஸின் மேலிட உத்தரவையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் பிறழ் சாட்சியம்

டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 போட்டித் தோ்வு: மாவட்ட மைய நூலகத்தில் மாதிரித் தோ்வு

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: கு. செல்வப்பெருந்தகை

பாமகவினா் தீவிர வாக்கு சேகரிப்பு

கல்வி சந்தைப் பொருளாகி விட்டது: சீமான்

SCROLL FOR NEXT