இந்தியா

அசாம் : மகனின் ஆன்லைன் விளையாட்டு மோகத்தால்  ரூ.19 லட்சத்தை இழந்த பெற்றோர்

DIN

அசாம் மாநிலத்தில் 12 வயதான சிறுவன் தன்னுடயை பெற்றோர்களின் வங்கிக்கணக்கை அவர்களுக்குத் தெரியாமல் கையாண்டு ஆன்லைன் விளையாட்டுகளில் ஒன்றான ‘பாட்டில் கிரவுன்ட் மொபைல் இந்தியா’ விளையாட்டில் துப்பாக்கிகளை வாங்கவும் அடுத்த கட்டத்திற்குச் செல்லவும் உதவிய நண்பர்களிடம் ரூ. 19 லட்சத்தை பறிகொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலில் சிறுவனுடன் அப்பகுதியில் இருந்த வேறு சில சிறுவர்களும் நட்பை ஏற்படுத்திக் கொண்டனர் அதில் நிபுராஜ் கோகாய்(20) என்கிற இளைஞனும் இணைந்துகொண்டான்.

ஒருகட்டத்தில் சிறுவனுக்கு ஆன்லைன் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி அதில் உபகரணங்களையும் , துப்பாக்கிகளையும் வாங்குவதற்கு பணம் தேவை என எடுத்துக் கூறி அச்சிறுவனின் அம்மாவின் வங்கிக் கணக்கை பெற்றிருக்கிறார்கள். சில நாட்கள் விளையாட மட்டுமே அந்த பணத்தைப் பயன்படுத்தியவர்கள் பின் பணத்தை தங்களுடைய சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்ற ஆரம்பித்தனர். பணத் தேவை ஏற்படுகிற போதெல்லம் சிறுவனிடம் சொல்லி அவனுடைய அம்மாவின் செல்போனில் பரிவர்த்தனைக்காக வருகிற ஓடிபி எண்ணைப் பெற்றிருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 4 ஆம் தேதியிலிருந்து செப்-6 வரை அவர்களின் வலையில் சிக்கிகொண்ட சிறுவன் தொடர்ந்து பணப்பரிவர்த்தனைக்கு உதவியாக இருக்க கிட்டத்தட்ட ரூ.19 லட்சம் மோசடி செய்திருக்கிறார்கள்.

பரிவர்த்தனை முடிந்ததும் வங்கியில் இருந்து வருகிற குறுஞ்செய்தியையும் உடனே அழித்து விடுவதால் சிறுவனுடைய பெற்றோருக்கு இதுகுறித்து எதுவும் தெரியவில்லை. 

இந்நிலையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை வைத்து தங்களுடயை மகன் எதையோ செய்து கொண்டிருகிறான் என பெற்றோர்கள் சோதனை செய்தபோது பல லட்சங்கள் பறிபோனதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்,

உடனடியாக காவல் நிலையம் சென்று சம்பவம் குறித்து தெரிவித்தததும் சிறுவனை வலையில் வீழ்த்தி பணத்தைப் பறித்த கோகாய் மற்றும் அவன் கூட்டாளிகளான இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் லோக்நாத் பாசுமாதரி ,’ சிறுவனின் ஆன்லைன் விளையாட்டு மோகத்தை அறிந்து கொண்ட கோகாய் அவனுடைய அம்மாவின் ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில் இருந்து  பல லட்சங்களை பரிவர்த்தனை செய்திருக்கிறான். இதில் கோயாயுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட இருவரும் சிறார்கள் என்பதால் அவர்களைக் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் கோகாய் நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தப்பட இருக்கிறான்’ எனத் தெர்வித்தார்.

மேலும் ‘ குழந்தைகளை சரியாக கவனிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. கொஞ்சம் தன் மகனை சோதனை செய்திருந்தாலும் இவ்வளவு பெரிய தொகை பறிபோயிருக்காது. ஸ்மார்ட்போனை வைத்திருக்கும் குழந்தைகளைக் கட்டாயம் கவனிக்க வேண்டும் .இது பெற்றோர்களுக்கு ஒரு பாடம்’என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT