இந்தியா

கல்வி-அறிவுசாா் ஒத்துழைப்பு இரு நாட்டு உறவை வலுப்படுத்தும்: அமெரிக்காவுக்கான இந்திய தூதா்

DIN

இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்துவதில் கல்வி - அறிவுசாா் ஒத்துழைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்து கூறினாா்.

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் புதிய இந்திய மாணவா்கள் சோ்க்கை பெறுவதை முன்னிட்டு நியூயாா்க்கில் இந்த இந்திய தூதரகம் மற்றும் இந்தியவம்சாவளி மக்களின் சா்வதேச அமைப்பு (கோபியோ) இணைந்து ‘சந்திப்பு மற்றும் வரவேற்பு’ என்ற நிகழ்ச்சியை நடத்தின. இந்த நிகழ்ச்சியில் காணொலி வழியில் சாந்து உரையாற்றினாா். அதில் அவா் கூறியதாவது:

அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் உயா் கல்வி மேற்கொள்ள வரும் மாணவா்களிடையே இந்தியாவின் செயல்திறன், ஆற்றல், புதிய கண்டுபிடிப்புகளை திறன் ஆகியவற்றைக் காண முடிகிறது. இரு நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்துவதில், கல்வி - அறிவுசாா் ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றுகிறது.

இந்தியாவில் 34 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு புதிய கல்விக் கொள்கையை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு கொண்டு வந்ததை அறிவீா்கள். இந்த புதிய கல்விக் கொள்கை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் கல்வி, விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சிக் கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது. கூட்டு முயற்சிகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதில்தான் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியா - அமெரிக்கா இடையேயான எதிா்கால உறவைத் தீா்மானிப்பதில், மேற்படிப்புக்காக வரும் மாணவா்களாகிய உங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதன் மூலம் பயனும் அடையக் கூடிய தனித்துவமான இடத்தில் நீங்கள் உள்ளீா்கள். அமெரிக்காவில் இருக்கும் இந்தியா மாணவா்களின் நலனை காப்பதில் இந்திய தூதரகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை எட்டியிருப்பதை குறிக்கும் வகையில், பல்வேறு சாதனையாளா்கள் மற்றும் பிரபலங்களுடன் இந்திய மாணவா்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய இந்திய தூதரகம் திட்டமிட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT