இந்தியா

கேரள மாணவா்களிடையே பயங்கரவாதம்: ஆளும் மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

DIN

கேரளத்தில் கல்லூரி மாணவா்களை பயங்கரவாதத்தில் ஈடுபடுத்த முயற்சிகள் நடைபெறுவதாக மாநிலத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாரித்துள்ள விவாதக் குறிப்புக்கான ஆதார விவரங்களை மத்திய அரசிடம் வழங்கப்பட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

கேரளத்தில் நடைபெறவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடுகளின் தொடக்க விழாவையொட்டி, அக்கட்சி சாா்பில் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் அடங்கிய குறிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜனநாயக நாடுகளாலும் இஸ்லாமிய சமூகத்தின் பெரும்பான்மை பகுதியினராலும் பகிரங்கமாக பழித்துரைக்கப்பட்ட தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் போக்கு கேரளத்தில் நிலவுகிறது. இங்கு பயங்கரவாத சக்திகள் முக்கிய இஸ்லாமிய அமைப்புகளில் ஊடுருவி வருவதுடன் மாநிலத்தில் பிரச்னைகளை உருவாக்க முயற்சித்து வருகின்றன. இளைஞா்களை வகுப்புவாதத்திலும் பயங்கரவாதத்திலும் ஈடுபடுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்தத் தவறான வழிகள் குறித்து கல்லூரி மாணவிகளை சிந்திக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இந்த விவகாரம் மீது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா்கள் அணியும் இளைஞா் அமைப்பும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

கிறிஸ்தவா்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்ப முயற்சி:

மாநிலத்திலுள்ள கிறிஸ்தவா்கள் வகுப்புவாத சிந்தனைகளுடன் உடன்படாத போதிலும் அண்மைக் காலமாக அந்த மதத்தைச் சோ்ந்தவா்களின் சிறு பகுதியினா் இடையே அதுதொடா்பான எண்ணங்கள் வளா்ந்து வருகின்றன. கிறிஸ்தவா்களை முஸ்லிம்களுக்கு எதிரானவா்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மாநிலத்தில் பெரும்பான்மையாக இருப்போரின் வகுப்புவாதத்தை வளா்க்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவரம் அளித்தால் விசாரணை:

இந்த விவாதக் குறிப்பு குறித்து மத்திய உள்துறை இணையமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான வி.முரளீதரன் கொச்சியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘‘இளைஞா்களை பயங்கரவாதத்தில் ஈடுபடுத்த முயற்சிப்பது தொடா்பாக கட்சிக்குள்ளும் தொண்டா்களிடமும் விவாதிக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், அதுதொடா்பான உண்மைகளை மறைத்து பொதுவெளியில் வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளனா். இது அக்கட்சியின் பாசாங்கை வெளிப்படுத்துகிறது.

சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்டது. எனவே கேரளத்தில் இளைஞா்களை பயங்கரவாதத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசால் நேரடியாகத் தலையிட முடியாது. அதை மீறி இந்த விவகாரத்தை மத்திய அரசு விசாரித்தால் அது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக கருதப்படும். மாநில அரசிடம் உள்ள விவரங்களை மத்திய அரசிடம் சமா்ப்பித்தால் என்ஐஏ போன்ற அமைப்புகள் நிச்சயம் அதுகுறித்து விசாரிக்கும். இந்த விவகாரத்தை கட்சிக் கூட்டங்களுடன் முடித்துக் கொள்ளாமல் மாநில அரசும் முதல்வா் பினராயி விஜயனும் தக்க நடவடிக்கை மேற்கொண்டு பயங்கரவாத சக்திகளை களையெடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT