இந்தியா

நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு

DIN

அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், “காலப்போக்கில் நான் பெற்ற ஏராளமான அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகள் ஏலத்தில் விடப்பட உள்ளன. நமது ஒலிம்பிக் போட்டியின் நாயகர்கள் வழங்கிய சிறப்பு நினைவுப் பரிசுகளும் இதில் அடங்கும். 
இந்த ஏலத்தில் கலந்து கொள்ளுங்கள். இதன் மூலம் கிடைக்கும் தொகை நமாமி கங்கை முன்முயற்சிக்கு வழங்கப்படும்”, இவ்வாறு அவர் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள், நினைவுப் பொருள்கள் இன்று(செப்-17) முதல் இணைய வழியாக ஏலம் விடப்படுகிறது. 

இந்த ஏலம் வருகிற அக்-7 ஆம் தேதி வரை  நடைபெறும் என கலாச்சாரத்துறை தெரிவித்திருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் 78.72% வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை தொகுதியில் வாக்காளா் பட்டியலில் 488 போ் நீக்கம்: வேட்பாளா், பொதுமக்கள் சாலை மறியல்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

SCROLL FOR NEXT