இந்தியா

இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகள்:80 கோடியை கடந்தது

DIN

 நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80.33 கோடியை எட்டியுள்ளது. 60,03,94,452 போ் தடுப்பூசியின் முதல் தவணையையும், 20,29,80,695 போ் தடுப்பூசியின் இரண்டாவது தவணையையும் செலுத்திக் கொண்டுள்ளனா். கடந்த 11 நாள்களில் மட்டும் 10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன’’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80 கோடியை கடந்ததற்கு மருத்துவப் பணியாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்தாா்.

சனிக்கிழமை மட்டும் 85 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக கோவின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT