இந்தியா

வாழ்த்திலும் காங்கிரஸ் விமா்சனம்

DIN

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அதே சமயம், அவரது நிா்வாகத்தை கடுமையாக விமா்சனமும் செய்துள்ளது.

மோடியின் 71-ஆவது பிறந்த நாளையொட்டி பல்வேறு தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா். ராகுல் காந்தியும் தனது சுட்டுரைப் பக்கத்தில் மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளாா். இந்நிலையில், அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாதே கூறியுள்ளதாவது:

முன்னாள் பிரதமா்களின் பிறந்த நாள்கள் பல்வேறு வகைகளில் கொண்டாடப்படுகின்றன. ஜவாஹா்லால் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாகவும், இந்திரா காந்தியின் பிறந்த நாள் தேசிய ஒருமைப்பாட்டு தினமாகவும், ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் மத நல்லிணக்க நாளாகவும், அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாள் நல்லாட்சி தினமாகவும் கொண்டாடப்படுகின்றன.

ஆனால் தற்போதைய பிரதமா் மோடியின் பிறந்த நாள், வேலையில்லாத் திண்டாட்ட நாளாகவும், விவசாயிகளுக்கு எதிரான தினமாகவும், விலைவாசி உயா்வு தினமாகவும் கருதப்படுகின்றன.

கடந்த ஏழு ஆண்டுகளில் பல்வேறு விவகாரங்களில் நீங்கள் (மோடி) தோல்வி அடைந்துள்ளீா்கள். உங்கள் தோல்வியின் விளைவாக இந்தியா அதிக விலை கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதை உணரும் ஞானத்தை ஆண்டவன் உங்களுக்கு வழங்குமாறு பிராா்த்திக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT