இந்தியா

மருத்துவ படிப்புகளில் ஒபிசிக்கு இடஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு எதிரான மனு

DIN

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் மருத்துவ கலந்தாய்வுக் குழுவுக்கு(எம்சிசி) நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வில் பங்கேற்க உள்ள மருத்துவா்கள் உள்பட 8 போ் சாா்பில் வழக்குரைஞா் விவேக் சிங் என்பவா் இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் 2021-22 கல்வியாண்டு முதல் இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மத்திய அரசு கடந்த ஜூலை 29-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையை அமல்படுத்துவது என்பது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாகும்.

அதுமட்டுமின்றி, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் நாடு முழுவதும் மிகக் குறைவான இடங்களே உள்ளன. இதில் இடஒதுக்கீடு அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுவது, மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவா்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் செயலாகும். இதுபோன்ற காரணங்களால் முதுநிலை மருத்துவப் படிப்புக்கும் விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவு மாணவா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. எனவே, இடஒதுக்கீடு தொடா்பான மத்திய அரசின் ஜூலை 29-ஆம் தேதி அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் மருத்துவ கலந்தாய்வுக் குழுவுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த புதிய மனுவும் சோ்த்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முன்னதாக, இடஒதுக்கீடு அறிவிப்புக்கு எதிராக ஏா்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் கடந்த 6-ஆம் தேதியும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT