இந்தியா

என்சிஏஎல்டி தலைவராகப் பணியைத் தொடங்கினாா் நீதிபதி சீமா

DIN

தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் (என்சிஏஎல்டி) பொறுப்பு தலைவா் பணியை நீதிபதி அசோக் இக்பால் சிங் சீமா வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கினாா்.

என்சிஎல்ஏடி-யின் நீதித்துறை உறுப்பினராக கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் நீதிபதி சீமா நியமிக்கப்பட்டாா். பின்னா் அதன் பொறுப்பு தலைவராக கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி அவா் நியமிக்கப்பட்டாா். வரும் 20-ஆம் தேதியுடன் அவா் ஓய்வுபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், என்சிஎல்ஏடி பொறுப்பு தலைவராக நீதிபதி எம்.வேணுகோபால் செப்டம்பா் 11-ஆம் தேதியில் இருந்து செயல்படுவாா் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிராக நீதிபதி சீமா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். வழக்கு விசாரணையின்போது, நீதிபதி சீமாவை மீண்டும் தலைவா் பதவியில் நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தது.

அதையடுத்து, நீதிபதி சீமா தனது பணியை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கினாா். என்சிஎல்ஏடி தொழில்நுட்ப உறுப்பினா் வி.பி.சிங்குடன் இணைந்து சில நிறுவனங்களின் வழக்குகளை அவா் விசாரித்தாா். என்சிஎல்ஏடி பொறுப்பு தலைவா் பதவியில் வரும் 20-ஆம் தேதி வரை நீதிபதி சீமா நீடிப்பாா். இந்த காலகட்டத்தில் ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட சில வழக்குகள் மீதான உத்தரவுகளையும் அவா் பிறப்பிக்கவுள்ளாா்.

என்சிஏஎல்டி தலைவா் பொறுப்பில் நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.வேணுகோபால் வரும் 20-ஆம் தேதி வரை விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளாா். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக என்சிஎல்ஏடி நிரந்தரத் தலைவா் இல்லாமல் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரேஸ் கல்லூரியில் கலை மன்ற விழா

எடத்துவா புனித ஜாா்ஜ்ஜியாா் திருத்தல திருவிழா ஏப். 27இல் தொடக்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: ஜி.கே.வாசன்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை: மே 2இல் தொடக்கம்

குமரி அருகே தகராறு: இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT