இந்தியா

பான் - ஆதாா் எண்களை இதுவரை இணைக்கவில்லையா?

18th Sep 2021 11:14 AM

ADVERTISEMENT

 

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் மாதத்துடன் நிறைவு பெறவிருந்த நிலையில், அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே.. இதைச் செய்யாமல் விட்டால் குழந்தையின் ஆதார் செல்லாததாகிவிடும்

நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

இது தொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கரோனா சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமத்தைக் கருத்தில்கொண்டு பான் எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராத நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கான கெடுவும் செப். 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பினாமி சொத்து பரிவா்த்தனை தடைச் சட்டம் 1988-இன் கீழ் உத்தரவு வழங்கும் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடுதல், உத்தரவை நிறைவேற்றுவதற்கான காலமும் 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : aadhar PAN
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT