இந்தியா

ம.பி.யிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் எல். முருகன்

18th Sep 2021 11:09 AM

ADVERTISEMENT


புது தில்லி: மத்திய இணை அமைச்சராக இருக்கும் எல். முருகன், மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட உள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிங்களவை பதவிக்கான வேட்பாளராக எல். முருகனை அறிவித்துள்ளது பாஜக.

மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட நிலையில், எம்.பியாக. தேர்வு செய்யப்பட உள்ளார் எல். முருகன்.

மத்தியப் பிரதேசத்தில் காலியாகவிருக்கும் மாநிலங்களவைப் பதவிக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. மத்தியப் பிரதேச பேரவையில் பாஜகவுக்கு போதுமான பலம் இருப்பதால், மாநிலங்களவைக்கு முருகன் தேர்வு செய்யப்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

ADVERTISEMENT

Tags : madhya pradesh rajya sabha mp l murugan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT