இந்தியா

பாஜகவின் இ-ராவணர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்: அகிலேஷ்

18th Sep 2021 01:28 PM

ADVERTISEMENT


லக்னௌ: சமூக வலைத்தளங்களில் பாஜகவின் இ-ராவணர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள், உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் போது பொய்யான தகவல்களைப் பரப்ப அவர்கள் பயன்படுத்தப்படுத்தப்படுவர் என்று சமாஜ்வாதி தொண்டர்களுக்கு அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி சார்பில் நடைபெற்ற விஸ்வகர்மா ஜயந்தி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அகிலேஷ் யாதவ், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில், சமூக வலைத்தளத்தில் பயிற்சி பெற்ற இ-ராவணர்கள் பயன்படுத்தப்படுவார்கள். பாஜக பல பொய்யான தகவல்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும். அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

கரோனா பொதுமுடக்கத்தின் போது, பணக்காரர்களுக்காக விமான சேவையை இயக்கி வந்த மத்திய அரசு, ஏழை மக்களுக்கான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை நிறுத்தியதையும் அகிலேஷ் யாதவ் சுட்டிக்காட்டினார்.
 

Tags : social media Akhilesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT