இந்தியா

மனதின் குரல் நிகழ்ச்சி: மக்கள் கருத்துகளை அனுப்ப பிரதமா் அழைப்பு

DIN

வரும் 26-ஆம் தேதி வானொலியில் ஒலிபரப்பாகவுள்ள ‘மனதின் குரல்’ 81-ஆவது நிகழ்ச்சிக்கான யோசனைகள் மற்றும் கருத்துகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி நாட்டு அழைப்பு விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக சுட்டுரையில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘வரும் 26-ஆம் தேதி ஒலிபரப்பாகவுள்ள இந்த மாதத்துக்கான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கு மக்களிடம் இருந்து பல சுவாரஸ்யமான யோசனைகள் கிடைத்த வண்ணம் உள்ளன. நீங்களும் உங்கள் யோசனைகளை நமோ செயலி அல்லது ‘மை ஜிஓவி’ வலைதளம் அல்லது 1800-11-7800 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்யலாம்’ என்று கூறியுள்ளாா்.

பிரதமராகப் பதவியேற்ற பிறகு கடந்த 2014 அக்டோபரில் இருந்து மாதம்தோறும் வானொலி, தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றி வருகிறாா். 7 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி தொடா்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின்போது சாதனைபடைத்த சாமானிய மக்கள் முதல் சமூகத்தின் பல்வேறு தரப்பினருடனும் பிரதமா் கலந்துரையாடுவதும் வழக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தூத்துக்குடி பெண் தூய்மைப் பணியாளர் வெட்டிக் கொலை

காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் - புதுதில்லி முதலிடம்

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள்: பா.ஜ.க.வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!

SCROLL FOR NEXT