இந்தியா

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் அதிகமானோர் ஆண்களா? பெண்களா?

DIN


கரோனா பேரிடருக்கு எதிரான பேராயுதமாக மருத்துவத் துறை இதுவரை நம்பிக் கொண்டிருப்பது கரோனா தடுப்பூசிகள்தான். 

நாட்டில் கரோனா பரவலுக்கு எதிராக, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 52.5% ஆண்களும், 47.5% பெண்களும் அடங்குவர். ஏனோ, நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் ஆண்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் பெண்கள் இருக்கிறார்கள்.

புதன்கிழமை மதியம் நிலவரப்படி நாட்டில் இதுவரை 76.09 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் ஆண்கள் 39.89 கோடி தடுப்பூசியையும், பெண்கள் 36.19 கோடி தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர். இதில் மிகக் குறைவான அளவில் திருநங்கைகளும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் பெரியவர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி இரண்டு மாத காலம் ஆன பிறகு அதாவது கடந்த ஜூன் மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களின் விகிதம் 46 சதவீதமாக இருந்தது. ஆனால், இதுவரை அந்த நிலை பெரிய அளவில் மாறவில்லை. தற்போது வெறும் 1.5 சதவீதம் மட்டுமே அதில் உயர்வு கண்டுள்ளது.

நாட்டில் பெண்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும் பல்வேறு மாநிலங் தலைமைச் செயலாளர்கள் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்திடமும் கலந்தாலோசனை நடத்தி, தடுப்பூசி செலுத்துவதில் இருக்கும் பாலின வேறுபாட்டை களைய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி வருகிறது.

கரோனா தடுப்பூசி மையங்களுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையமும் கடந்த மாதம் வலியுறுத்தியிருந்தது. பெண்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.

மகளிர் உரிமை அமைப்புகள் பலவும், வழக்கமாகவே குடும்பப் பெண்களின் உடல்நலம் எப்போதும் உரிய கவனம் பெறுவதில்லை. மேலும், ஆண்களைப் போல வெளியில் சென்று வேலை அதிகம் இல்லாத பெண்களுக்கு, குடும்பங்களில், கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT