இந்தியா

உத்தரகண்டில் காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக 'ஆபரேஷன் ஸ்மைல்' பிரசாரம்

16th Sep 2021 05:34 PM

ADVERTISEMENT

உத்தரகண்ட் மாநிலத்தில் காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக 'ஆபரேஷன் ஸ்மைல்' என்ற பெயரில் மாநில காவல்துறை பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. 

இந்த பிரசாரம் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 14 வரை நடைபெறுகிறது. 

மாநிலத்தின் முக்கிய தங்குமிடங்கள், தாபாக்கள், தொழிற்சாலைகள், பேருந்து நிலையங்கள், கழிப்பிடங்கள், வழிபாட்டுத் தலங்கள், ஆசிரமங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் காவல்துறை குழுக்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன

இதுகுறித்து காவல்துறை இயக்குநர் (டிஜிபி) அசோக்குமார், 'கடந்த 2015 முதல் 'ஆபரேஷன் ஸ்மைல்' நடத்தப்படுகிறது. இதுவரை ஆபரேஷன் ஸ்மைலின் கீழ், 2,183 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 100 ஆண்கள், 207 பெண்கள் மற்றும் 1,876 குழந்தைகள். 

ADVERTISEMENT

இந்த பிரசாரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்/துணை காவல் கண்காணிப்பாளர் மாவட்ட அளவில் நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டேராடூன், ஹரித்வார், உதாம் சிங் நகர் மற்றும் நைனிடால் ஆகிய இடங்களில் தலா ஒரு துணை ஆய்வாளர் மற்றும் 4 காவலர்கள் அடங்கிய நான்கு குழுக்கள் அமைக்கப்படும். இவற்றில், ஒரு குழு மனிதக்கடத்தல் தடுப்பு பிரிவாக அமைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள மாவட்டங்களில் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவு இந்த பிரசாரத்தை நடத்தும். ரயில்வேயில் ஒரு துணை ஆய்வாளர் மற்றும் 4 காவலர் என ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேடுதல் குழுவிலும் காணாமல் போன/மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களை விசாரிக்க ஒரு பெண் காவலரும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு சட்ட அதிகாரி, ஒரு தொழில்நுட்ப குழு (DCRB) இந்த பிரசாரத்திற்கு உதவும்' என்று கூறினார். 

Tags : uttarakhand
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT