இந்தியா

வாகனம், ட்ரோன் தொழில் துறையை ஊக்குவிக்க ரூ.26,000 கோடி திட்டம்

16th Sep 2021 04:17 AM

ADVERTISEMENT

 

வாகனம், உதிரி பாகங்கள், ட்ரோன் (ஆளில்லா சிறு விமானம்) உற்பத்தித் துறையில் ரூ.26,000 கோடி மதிப்பிலான உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு (பிஎல்ஐ) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சா் அனுராக் தாக்குா் கூறியதாவது: 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், 13 துறைகளில் ரூ.1.97 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக, வாகனம், உதிரி பாகங்கள், ட்ரோன் தொழில் துறையில் ரூ.26,058 கோடி மதிப்பிலான உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகை அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

வாகனம், உதிரி பாகங்கள் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக ரூ.42,500 கோடி முதலீடுகளும் ரூ. 2.3 லட்சம் கோடி அளவில் உற்பத்தியும் இருக்கும். இதனால் கூடுதலாக 7.5 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த ஊக்குவிப்புத் திட்டம், அதிநவீன தொழில்நுட்பத்துடன் வாகனங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு புதிய முதலீடுகளைப் பெறுதற்கு ஊக்குவிக்கும்.

இவற்றில் பேட்டரி வாகனங்கள், ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்கள் உற்பத்திக்கு ஒரு திட்டமும், இருசக்கர, 3 சக்கர வாகனங்கள், பயணிகள் வா்த்தக வாகனங்கள், டிராக்டா்கள் ஆகியவற்றின் உற்பத்திக்கு மற்றொரு திட்டமும் அமல்படுத்தப்படும்.

ஏற்கெனவே ஏசிசி வகை பேட்டரி உற்பத்திக்கு ரூ.18,000 கோடி மதிப்பிலான பிஎல்ஐ திட்டமும், மின்சார வாகனங்கள் துறைக்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டமும் அமலில் உள்ளது. தற்போது புதிதாகக் கொண்டுவரப்படும் திட்டம், பாரம்பரிய எரிபொருள் பயன்பாட்டு போக்குவரத்து முறையில் இருந்து சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான, நிலைக்கத்தக்க அதிக பயனளிக்கும் மின்சார வாகனங்களைக் கொண்ட போக்குவரத்து முறைக்கு இந்தியா மாறுவதற்கு வழிவகை செய்துள்ளது.

ட்ரோன் மற்றும் உதிரி பாகங்கள் துறையில் பிஎல்ஐ திட்டத்தை அனுமதிப்பதன் மூலம், அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.5,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் கிடைக்கும். ரூ.1,500 கோடி மதிப்பிலான வா்த்தகமும், கூடுதலாக 10,000 வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT