இந்தியா

தில்லிக்கு இன்று கனமழை எச்சரிக்கை

DIN

தில்லிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை இன்று பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல்முறையாக 1,000 மிமீ மழை பெய்தது. செப்டம்பர் 11ஆம் தேதி, திடீரென பெய்த கனமழையால் தில்லி விமான நிலையம் மற்றும் பல பகுதிகளில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது.

இந்நிலையில், தில்லியில் இன்று காலை பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்துவருகிறது. ஈரப்பதம் சுமார் 92 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மழைக்காலத்தில் இதுவரை தலைநகரில் 1,146.4 மிமீ ஆண்டு மழை பெய்துள்ளது, இது 46 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சம். நகரத்தில் சனிக்கிழமை 117.9 மிமீ மழை பதிவானது. இதன் காரணமாக, தில்லி விமான நிலையத்தில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டது. 

முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியது. டெல்லிக்கு செல்லும் நான்கு உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு சர்வதேச விமானம என ஐந்து விமானங்கள் அண்டை நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்காவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி; உயிர் பிழைத்த ஒரே சிறுமி

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT