இந்தியா

கான்பூரில் இதுவரை 108 பேருக்கு டெங்கு

16th Sep 2021 04:31 PM

ADVERTISEMENT

கான்பூரில் இதுவரை 108 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றுக்கு இடையே டெங்கு பாதிப்பும் மாநிலத்தில் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த நிலையில் கான்பூரில் நேற்று புதிதாக மேலும் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 108ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 84 பேர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதையும் படிக்க- 100 கோடி பேருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை

அதேசமயம், மாவட்டத்தில் டெங்குவால் இதுவரை உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என மாவட்ட சுகாதார அதிகாரி கூறியுள்ளார். இதனிடையே மாநிலத்தில் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்துவித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். 

Tags : dengue cases
ADVERTISEMENT
ADVERTISEMENT