இந்தியா

2022-க்கான பத்ம விருதுகள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

15th Sep 2021 03:45 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: 2022-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க புதன்கிழமை கடைசி நாளாகும். 
இதற்காக ட்ற்ற்ல்ள்://ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ர்ஸ்.ண்ய் எனும் வலைதளத்தில் மட்டுமே விண்ணப்பங்கள், பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பத்ம விருதுகளை "மக்கள் பத்ம விருதுகளாக' மாற்ற அரசு உறுதி
பூண்டுள்ளது. எனவே, பெண்கள், சமூகத்தில் பின்தங்கியவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளி நபர்கள் மற்றும் சமூகத்திற்கு தன்னலமற்ற சேவையைச் செய்கிறவர்களிடையே அங்கீகரிக்கப்பட வேண்டிய திறமையான நபர்களை அனைவரும் அடையாளம் காணலாம். இது குறித்த மேலும் தகவல்களை உள்துறை அமைச்சகத்தின் வலைதளமான ஜ்ஜ்ஜ்.ம்ட்ஹ.ஞ்ர்ஸ்.ண்ய்-ல் விருதுகள் மற்றும் பதக்கங்கள் எனும் தலைப்பில் காணலாம்.
 பத்ம விருதுகளுக்கான பரிந்துரை விண்ணப்பங்களை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் இணையவழியில் அனுப்பி வைக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT