இந்தியா

‘பாஜகவுடன் ஒருபோதும் சமரசம் கிடையாது’: ராகுல்காந்தி திட்டவட்டம்

15th Sep 2021 05:20 PM

ADVERTISEMENT

பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் உடன் ஒருபோதும் காங்கிரஸ் கட்சி சமரசம் செய்து கொள்ளாது என அக்கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மகளிர் காங்கிரஸ் அமைப்பு தொடங்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

இதையும் படிக்க | பங்குச்சந்தை 2-வது நாளாக உயர்வுடன் நிறைவு: சென்செக்ஸ் 476 புள்ளிகள் ஏற்றம்

அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ், அமைப்புடன் சமரசம் செய்து கொள்ளாது” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

பாஜகவும், காங்கிரஸும் ஒரே சித்தாந்தத்தைப் பின்பற்றவில்லை. இரு கட்சிகளுக்கும் வேறு வேறு சித்தாந்தங்கள் உள்ளன. ஒரு காங்கிரஸ் கட்சிக்காரனாக என்னால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கொள்கையைத் தவிர இதர கொள்கைகளுடன் சமரசம் செய்துகொள்ள முடியும். அப்படி இருக்கும்போது கோட்சே, சாவர்க்கர் கொள்கைகளுடன் எப்படி காந்தியின் காங்கிரஸ் கொள்கைகளை இணைத்துப் பார்க்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

Tags : Rahul Gandhi BJP
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT