இந்தியா

மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு; தில்லிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை

15th Sep 2021 01:16 PM

ADVERTISEMENT

தில்லியில் ஏற்கனவே இந்த மாதம் கனமழை பெய்து தீர்த்த நிலையில், இன்று இரவு முதல் மிதமானது முதல் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சிரிக்கை விடுத்துள்ளது. மிதான மழை பெய்யும் என வியாழக்கிழமை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சாலை மற்றும் வடிகால் மூடல் மற்றும் மின்சார விநியோகத்தில் குறுக்கீடு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளுடன் மிகவும் மோசமான வானிலைக்கான எச்சரிக்கையாக ஆரஞ்சு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 25.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. பகலில் பலத்த காற்று நகரைத் தாக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், "இரவில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இதுவரை இல்லாத அளவு தில்லியில் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்ககரோனா குறித்த தவறான தகவல்கள் பகிர்வதில் இந்தியா முதலிடம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ADVERTISEMENT

46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவமழை காலத்தில் தில்லியில் ஏற்கனவே 1,146.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகளவு மழை பெய்துள்ளது.

Tags : Delhi Rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT