இந்தியா

ஏர் இந்தியா முதலீடுகளை விற்க இறுதி கட்ட ஏலம்

15th Sep 2021 12:23 PM

ADVERTISEMENT

பொதுத்துறை நிறுவனமாக திகழும் ஏர் இந்தியா பெரும் கடனில் சிக்கி தவித்துவருகிறது. எனவே, இதனை தனியார்மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில், இதன் பங்குகளை விற்கும் வகையிலான நடைமுறைகளை இன்று (புதன்கிழமை) அரசு தொடங்கியுள்ளது. இந்த தேதியே இறுதியானது, இது மாற்றியமைக்கப்படாது என விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டே, ஏர் இந்தியாவின் 76 சதவிகித முதலீடுகளை விற்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதனை வாங்க யாரும் முன்வரவில்லை. இந்தமுறை, ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்கும் ஏலத்தில் இரண்டு நிறுவனங்கள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதனை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விற்க வேண்டும் என அரசு திட்டமிட்டுள்ளது.

"டாடா குழுமத்தின் தாய் நிறுவனம், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் ஆகியோர் ஏர் இந்தியா பங்குகளை வாங்கும் ஏலத்தில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது" என தகவல் வெளியாகியுள்ளது. "இம்முறை ஏர் இந்தியா பங்குகள் ஏலத்தில் விற்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது" என உயர் மட்ட அரசு அலுவலர்கள் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கபேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

ADVERTISEMENT

ஏர் இந்தியாவின் 43,000 கோடி ரூபாய் கடனில் 22,000 கோடி ரூபாய் கடனானது அதன் தாய் நிறுவனமான ஏர் இந்தியா அசெட் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்படும். "ஏர் இந்தியாவின் கடன் 43,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது, இவை அனைத்திற்கும் அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. புதிய உரிமையாளர்களுக்கு இது மாற்றப்படும் முன்பு, அதன் கடன்களை அரசு அடைத்துவிடும்" என ஒரு சாரர் கூறுகின்றனர். 

Tags : tata air india spicejet
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT